×

இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே என் லட்சியம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்று வரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது சிறந்த ஏற்றுமதி நிறுவனங்களுக்கு முதல்வர் விருது வழங்கினார். பின்னர் பேசிய அவர்; இந்தியாவின் ஏற்றுமதியில் தென் மண்டலம் முக்கிய பங்காற்றுகிறது. தமிழகம் 2030க்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக மாற வேண்டும் என விரும்புகிறேன். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தேவையான ஊக்கத்தினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 35 ஆயிரம் ஏற்றுமதியாளர்களில் 5 ஆயிரம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது. தென் மண்டலங்களின் ஏற்றுமதி அடுத்த 5 ஆண்டுகளில் 35%ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏற்றுமதியில் தென் மண்டலத்தின் பங்களிப்பு 27%ஆக உள்ளது. ஏற்றுமதியில் சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் சிறந்த பங்களிப்புகளை அளித்து வருகின்றன. சிறு, குறு, தொழில் நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அறிவுசார் நகரம் உருவாக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 43 புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் ஏற்றுமதி மூலம் ஏற்றம் பெற முடியும். தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் 24 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பித்துள்ளோம். தமிழ்நாட்டில் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்க வேண்டும். ஒன்றிய அரசின் ஏற்றுமதி திட்டங்கள் உற்பத்தியாளர்களை கொண்டு சேர்க்க கூட்டமைப்பு முன்வர வேண்டும். ஒவ்வொரு துறைகளுக்கான ஏற்றுமதி வழிகாட்டி வெளியிட ஏற்றுமதியாளர்கள் உதவ முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்; தமிழ்நாட்டில் ஏற்றுமதி கட்டமைப்பை ஊக்குவிக்க ரூ.100 கோடி சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வெளிவட்ட சுற்றுச்சாலை திட்டத்துக்கு ரூ.2,250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை – கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்துக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் 2ம் கட்டத்துக்கு ரூ.628 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கூறினார். …

The post இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே என் லட்சியம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Chief Minister ,MJ. G.K. Stalin ,Chennai ,Chief of the CM ,Federation of Exporters ,Alwarpet, Chennai ,G.K. Stalin ,B.C. G.K. Stalin ,
× RELATED 40க்கு 40 வெற்றியை வழங்கிய தமிழக...