×

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக மருத்துவ மாணவர்கள் பயில்கின்றனர்: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லூரி, அரசு மருத்துவமனையில் ரூ2.5  கோடியில் புனரமைக்கப்பட்ட கட்டிடம் உள்பட கோவை மாவட்டம் முழுவதும் ரூ.8.78  கோடி செலவில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் மற்றும் அதிநவீன  மருத்துவ உபகரணங்களை அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், செந்தில்பாலாஜி ஆகியோர்  நேற்று திறந்து வைத்து பேசுகையில்,  கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் 150 மாணவர்கள் படித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மாணவரின்  எண்ணிக்கையை அதிகப்படுத்த ஒன்றிய அரசிடம் தமிழக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி தற்போது 200 மாணவர்கள் பயில அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும், 1,550 புதிய இடங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.  இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான், அதிகளவில் ஆண்டுதோறும், அதிக மருத்துவ  மாணவர்கள் பயில்கின்றனர். டெல்லியில் மக்கள்  நெருக்கடியான இடத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு வந்த மருத்துவமனை  ஒன்றை பார்த்த தமிழக முதல்வர், அதேபோல் 709 நகர்ப்புற நல மையங்கள் கட்டவும் நிதி  ஒதுக்கியுள்ளார் என்றார்….

The post இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக மருத்துவ மாணவர்கள் பயில்கின்றனர்: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Health Minister ,Subramanian ,Govai ,Govai District ,Govai Government Medical College ,Government Hospital ,
× RELATED தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு...