×

ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோயில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு ரூ.1 கோடி நிலம் மீட்பு

வலங்கைமான், மே 19: வலங்கைமான் அடுத்த ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயில் நிர்வாகத்திற்குட்பட்டது, ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள்கோயில் இக்கோயிலிக்கு சொந்தமான காலிமனைகள், குடியிருப்புகள் கோயிலுக்கு அருகாமையில் உள்ளது. இதில் புலஎண் 56\41 ல் 0.11 சென்ட் மற்றும் புலஎண்-56\42 ல் 0.26 சென்ட் பரப்பளவு சொத்து நாகப்பட்டினம் இணை ஆணையர் நீதிமன்ற வழக்கு உத்தரவின் படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கையகப்படுத்தப்படும் பணி நேற்று காலை தொடங்கியது.அப்போது, அந்த இடத்தை தன் வசம் வைத்திருந்த கருப்பையா இடத்திற்குரிய ஆவணங்கள் தங்கள் வசம் உள்ளது. நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம் என தெரிவித்ததோடு, அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடம் என்பதற்கான தகவல் பலகை வைக்கக்கூடாது என அதிகாரிகளிடம் வாதிட்டார். உரிய ஆவணங்கள் எதும் இல்லாததால், கருப்பையாவின் வாதத்தை ஏற்க அறநிலையத்துறை அதிகாரிகள் மறுத்தனர். அப்போது கருப்பையா மற்றும் அவரது உறவினர்கள் அதிகாரிகளிடம் வாதிட்டனர்.வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாவிடம் ஆக்கிரமிப்பை அகற்றிட உதவுமாறு அறநிலைய உதவி ஆணையர் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, கருப்பையாவின் ஆவணங்கள் ஏதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அதிகாரிகள் தெரிவித்துடன், ஆக்கிரமிப்புகளை கோயில் பணியாளர்களை கொண்டு அறநிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடம் அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என்ற தகவல் பலகையும் அங்கு வைக்கப்பட்டது. இந்த பணியின் போது, குருபரிகார கோயில் கண்காணிப்பாளர் அரவிந்தன், கோயில் நிர்வாக அதிகாரிகள் மாதவன், மணிகண்டன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது கோயில் நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தின் சந்தை மதிப்பு ரூ.1 கோடியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோயில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு ரூ.1 கோடி நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Alangudi Abhayavaradharaja Perumal temple ,Valangaiman ,Alangudi ,Abhayavaradharaja Perumal ,temple ,
× RELATED வலங்கைமான் ஒன்றியத்தில் 50 கிராம...