×

ஆயுதப்படை போலீஸ்காரர்மீது போலீசில் எஸ்aஐ புகார்

கிருஷ்ணகிரி, ஏப்.6: கிருஷ்ணகிரி ஆயுதப்படை எஸ்ஐ.,யாக இருப்பவர் ராமமூர்த்தி. ஆயுதப்படை போலீஸ்காரர் அபினேஷ்குமார் (36). இவரது பொறுப்பில் இருந்த 10 துப்பாக்கி தோட்டாக்கள் காணாமல் போனதாக தெரிகிறது. இதுதொடர்பாக, கிருஷ்ணகிரி தாலுகா போலீசில், நேற்று முன்தினம் அபினேஷ்குமார் மீது ராமமூர்த்தி புகார் அளித்தார். இதனிடையே, நேற்று முன்தினம் மதியம், ராமமூர்த்தி கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த அபினேஷ்குமார், ராமமூர்த்தியை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மீண்டும் ராமமூர்த்தி கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தார். இந்த புகார்களின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆயுதப்படை போலீஸ்காரர்
மீது போலீசில் எஸ்aஐ புகார்
appeared first on Dinakaran.

Tags : SI ,Krishnagiri ,Krishnagiri Armed Forces ,SI Ramamurthy ,Abinesh Kumar ,SAI ,Dinakaran ,
× RELATED பெண் எஸ்.ஐயை ஆபாசமாக திட்டியதாக புகார்: சிவகங்கை நகர பாஜக தலைவர் கைது