×

ஆந்திராவில் இருந்து கடத்திய 25 கிலோ குட்கா பறிமுதல்: குடியாத்தத்தில் 2 பேர் கைது

 

குடியாத்தம், மே 31: ஆந்திராவில் இருந்து குடியாத்தத்திற்கு 25 கிலோ குட்கா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பூசாரிவலசை பகுதியில் பரதராமி போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக ஒரே பைக்கில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உட்பட குட்கா பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவர்கள் அரியலூரை சேர்ந்த வெற்றிவேல்(26), சித்தூர் மாவட்டம், பாவடதேசூரை சேர்ந்த முனியப்பன்(37) என்பதும், ஆந்திரா மாநிலத்தில் இருந்து குட்காவை குறைந்த விலைக்கு வாங்கி வந்து விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர்களிடம் இருந்து 25 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஆந்திராவில் இருந்து கடத்திய 25 கிலோ குட்கா பறிமுதல்: குடியாத்தத்தில் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Gudiyatham ,Bharatharami ,Poosarivalasai ,Vellore district ,
× RELATED 22 மோட்டார் விபத்து வழக்குகளுக்கு ரூ.3.6...