×

ஆதனக்கோட்டை பகுதியில் கடலை விதை விதைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை ஊராட்சியில் விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபட்டுள்ளனர்.தற்சமயம் நெல் பயிருக்கு தண்ணீர் கட்டுவது , கடலை பயிருக்கு களை வெட்டுவதும் ,சோள பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவது போன்ற பாசன விவசாய வேலை நடைபெற்று வரும் வேளையில், இதற்கு இடையில் சிலர் நிலத்தை உழுது கடலை விதை விதைத்து வருகிறார்கள்.அவர்களிடம் பேசியபோது ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இருப்பதால் தற்சமயம் பயமில்லாமல் விவசாயம் செய்யலாம் என்றும் ஆடிப்பட்டம் தேடி விதை என்பதற்கு ஏற்ப இந்த பட்டம் நல்ல மகசூல் தரும் எனவும். இந்த பகுதி மக்கள் தற்சமயம் எள், கடலை பருப்புகளை வியாபாரிகளிடம் வாங்கி தங்களுக்கு தேவையான அளவு எண்ணெய்யை மில்லில் கொடுத்து எண்ணெய் பிழிந்து வைத்து கொள்வதால் தூய சுத்தமான சமையல் எண்ணெய் மக்களுக்கு கிடைக்கிறது. இதனால் உள்ளுரிலேயே எண்ணை வித்துகள் நல்ல விலைக்கு விற்பனை ஆகிறது என தெரிவிக்கின்றனர்.இதேபோல் உள்நாட்டு பொருள்களை நமது மக்கள் விரும்பி வாங்கினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்கும் என கூறுகின்றனர்….

The post ஆதனக்கோட்டை பகுதியில் கடலை விதை விதைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சென்னை கேளம்பாக்கம் அருகே இருசக்கர...