- பொங்கல் திருவிழா
- இறைவன் கோவில்
- RSMangalam
- சமத்து பொங்கல் விழா
- புனித இதய இறைவன் கோவில்
- வடக்கு தெற்கு நெண்டல்
- பொங்கல்
- இறைவன் கோவில்
ஆர்.எஸ்.மங்கலம், ஜன.21: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வடக்கு தெற்கனேந்தல் கிராமத்தில் உள்ள புனித இருதய ஆண்டவர் ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவின் முன்னதாக கிராம பொதுமக்கள் ஒன்றாக இணைந்து நீண்ட வரிசையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியின் தொடர்சியாக அங்குள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம நிர்வாகிகளும், பொதுமக்களும் செய்திருந்தனர்.
The post ஆண்டவர் ஆலயத்தில் பொங்கல் விழா appeared first on Dinakaran.