×

ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

நரசிங்கபுரம், ஏப்.28: ஆத்தூர் அருகே கல்வராயன்மலை அடிவாரத்தில் முட்டல் ஏரி, ஆணைவாரி நீர்வீழ்ச்சி, வனத்துறையின் சுற்றுலா திட்டத்தில் செயல்படுகிறது. தற்போது பள்ளிகளுக்கு தொடர்விடுமுறையால் நேற்று சேலம், சென்னை, கள்ளக்குறிச்சி, தலைவாசல், நாமக்கல், கெங்கவல்லி ஆத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் குவிந்தனர். அவர்கள் நீர்வீழ்ச்சியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பின்னர், படகு சவாரி செய்தும், பூங்காவில் குழந்தைகளுடன் ஆர்வத்துடன் விளையாடினர். சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Anaivari waterfall ,Narasinghapuram ,Muttal Lake, ,Anaivari ,waterfall ,Kalvarayanmalai ,Athur ,Forest Department ,Salem ,Chennai ,Kallakurichi ,Thalaivasal ,Namakkal ,Kengavalli Athur ,Villupuram ,
× RELATED பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்