×

ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதி

திருவனந்தபுரம்: ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனம்  செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. கேரளாவில் கடந்த மாதம் 17ம்  தேதி முதல் கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள் உள்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களில்  தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. சபரிமலை  ஐயப்பன் கோயிலிலும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்க  தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் 21ம் தேதி வரை 5  நாட்கள் பூஜைகள் நடக்கிறது. இந்த நாட்களில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு  அனுமதி அளிக்கப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு  செய்யும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சபரிமலை வருபவர்கள்  48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ்  வைத்திருக்க வேண்டும். 2 முறை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு  ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் தேவையில்லை. வரும் 21ம் தேதி  இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். …

The post ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Sabarimalai Iyappan Temple ,Audi ,Thiruvananthapuram ,Sabarimalai Iyappan Temple walk ,of ,Sabarimalai ,Iyappan Temple ,
× RELATED நடுரோட்டில் டான்ஸ் ஆடி பஸ்சுக்கு கிக் கொடுத்த போதை ஆசாமி கால் உடைந்தது