ஆடிபட்ட காய்கறி விதை பாக்கெட்டுகள் ரூ.10க்கு விநியோகம் விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெற அழைப்பு

ஈரோடு, ஜூலை 30: ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்திட விதை பாக்கெட்டுகள் மூலம் ரூ.10க்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில், பொதுமக்கள், விவசாயிகள் பயன்பெற தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மரகதமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஈரோடு மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வீட்டு தோட்டத்தில் காய்கறி சாகுபடி செய்திட தோட்டக்கலைத்துறையின் மூலம் விதை பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதில், நாட்டு காய்கறி விதை பாக்கெட்டுகளில் தக்காளி, கத்தரி, வெண்டை, பாகல், புடலை, சுரைக்காய், பீர்க்கன், கொத்தவரை, கோழி அவரை, மிளகாய், பூசணிக்காய், சாம்பல் பூசணி, வீரிய காய்கறி விதை பாக்கெட்டுகளில் வெண்டை, கீரை, புடலை, பீர்க்கன், சுரைக்காய், பாகல், கொத்தவரை போன்ற விதைகளும் வழங்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் விநியோகம் செய்யப்பட உள்ளது. எனவே, காய்கறி விதைகள் தேவைப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வட்டார அலுவலகங்களில் ரூ.10(ஒரு விதை பாக்கெட்டுக்கு) செலுத்தி பெற்று கொள்ளலாம். இவ்வாறு துணை இயக்குநர் மரகதமணி தெரிவித்துள்ளார்.

The post ஆடிபட்ட காய்கறி விதை பாக்கெட்டுகள் ரூ.10க்கு விநியோகம் விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெற அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: