×

ஆசிரியர் நியமன முறைகேடு; மே.வங்க அமைச்சர்கள் வீடுகளில் சோதனை: அமலாக்கத் துறை நடவடிக்கை

கொல்கத்தா:  மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக 2 அமைச்சர்கள் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிபிஐ.க்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்த ஊழல் வழக்கில் பணம் எவ்வாறு கைமாறியது என்பது பற்றி அமலாக்கத் துறை விசாரணை நடத்துகிறது.இந்த முறைகேடு தொடர்பாக, முதல்வர் மம்தா தலைமையிலான அரசில் உள்ள அமைச்சர்கள்  பார்தா சட்டர்ஜி, பரேஷ் அதிகாரி ஆகியோரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். பார்தா சட்டர்ஜி தற்போது தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சராக இருக்கிறார். ஆனால், ஊழல் நடந்த கால கட்டத்தில் அவர் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். கல்வித்துறை இணை அமைச்சராக பரேஷ் அதிகாரி உள்ளார்.இந்த சோதனையில் ரூ.20 கோடி பணம், ஆவணங்கள் சிக்கின….

The post ஆசிரியர் நியமன முறைகேடு; மே.வங்க அமைச்சர்கள் வீடுகளில் சோதனை: அமலாக்கத் துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Bengal Ministers' ,Kolkata ,West Bengal ,Bengal ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல்...