டோக்கியோ : ஜப்பானுக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் ஜோபிடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள டோக்கியோ வருகை தந்த ஜோபிடன், இம்ப்ரியல் அரண்மனையில் ஜப்பான் மன்னர் நரூஹிட்டோவைச் சந்தித்து பேசினார். அப்போது கொரிய தீபகற்பத்தில் நிலவும் சூழல் உக்ரைன் மீதான ரஷ்யா போர் போன்ற விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதனிடையே டோக்கியோவில் திரண்ட போர் எதிர்ப்பு அமைப்பினர் அமெரிக்க அதிபர் ஜோபிடனை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.குவாட் உச்சி மாநாடு மூலம் ஆசியாவில் போர் மூள்வதற்கு அதிபர் ஜோபிடன் திட்டமிடுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். போர் வேண்டாம், குவாட் உச்சி மாநாடு வேண்டாம், கொரிய தீபகற்பத்தில் அமைதி அவசியம் என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி அவர்கள் முழக்கத்தில் ஈடுபட்டனர்.ஜப்பான் செல்லும் முன்பு தென் கொரியா சென்று அதிபர் ஜோபிடன், அந்நாட்டு அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது வடகொரியாவில் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை திட்டம் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். …
The post ஆசியாவில் போர் மூள்வதற்கு அதிபர் ஜோபிடன் திட்டமிடுகிறார் : ஜப்பானுக்கு வருகை தந்த அமெரிக்க அதிபருக்கு எதிராக முழக்கம்!! appeared first on Dinakaran.