×

ஆகஸ்ட் 1-ம் தேதி நேரடி/ ஆன்லைன் முறையில் பொறியியல் வகுப்புகள் தொடக்கம் : அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் அறிவிப்பு!!

டெல்லி : 2022-23-ம் கல்வியாண்டிற்கான பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புக்களை ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் தெரிவித்துள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘2022-23ம் கல்வி ஆண்டில் நாடு முழுவதும் பொறியியல் வகுப்புகளை ஆகஸ்ட் மாதத்தில் ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் வாயிலாக நடத்திக் கொள்ளலாம். 2022-23ம் கல்வி ஆண்டிற்கான நுழைவு தேர்வு மே மாதத்தில் நடைபெற வேண்டும். நுழைவுத் தேர்வின் முடிவுகள் ஜூன் 5ம் தேதிக்குள் வெளியிடப்பட்டு இருக்க வேண்டும். ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் முதல் கட்ட கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும். 2ம் கட்ட கலந்தாய்வை ஜூலை 20ம் தேதிக்குள்ளும் 3ம் கட்ட கலந்தாய்வாய் ஜூலை 30க்குள் முடிக்க வேண்டும். கலந்தாய்வில் காலியாக இருக்கக்கூடிய இடங்களை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும். நாடு முழுவதும் பொறியியல் வகுப்புகளுக்கான இந்த அட்டவணையை அனைத்து கல்வி நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டும். பேரிடர் காலத்தில் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளும் வழிகாட்டுதல்களும் வருமானால், இந்த தேதிகளில் மாற்றம் இருக்கலாம்,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  …

The post ஆகஸ்ட் 1-ம் தேதி நேரடி/ ஆன்லைன் முறையில் பொறியியல் வகுப்புகள் தொடக்கம் : அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : All India Technical Council ,Delhi ,All India Technology Council ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக டெல்லி வசந்த்விஹாரில் புதியகட்டடம் இடிந்து விபத்து!!