- அவ்வையார்
- அரசு பெண்கள் பள்ளி
- தர்மபுரி
- தர்மபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
- பள்ளி
- தலைமையாசிரியை
- காலச்செல்வி
- தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன்
- திமுக கிழக்கு மாவட்டம்
- அவ்வையார் அரசு பெண்கள் பள்ளி
தர்மபுரி: தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா, இலக்கிய மன்ற விழா மற்றும் ஆண்டு விழா என முப்பெரும் விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியை கலைச்செல்வி தலைமை வகித்தார். தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. ஒலிம்பிக் ஜோதியை ஏடிஎஸ்பி பாலசுப்ரமணியம், நாட்டாண் மாது, தலைமை ஆசிரியை கலைச்செல்வி, அதியமான் பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல், உதவி தலைமை ஆசிரியை ஜோதிலதா ஆகியோர் ஏற்றிவைத்தனர். மாணவிகளிடையே 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. விழாவில் மாணவிகளின் நடன நிகழ்ச்சி, சிலம்பம், யோகா, ஏரோபிக்ஸ் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து ஆசிரியைகள் பங்கேற்ற லக்கி கார்னர் போட்டி, டக்ஆப் வார் போட்டி ஆகியவை நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தத்தெடுப்பாளர் பாஸ்கர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மேச்சேரி அன்பழகன், முல்லைவேந்தன், சுருளிராஜன், ராஜா, குமார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரேவதி, ரோட்டரி சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி, மிட்டவுன் இளவரசன், கண்ணன், உதவி தலைமை ஆசிரியர் சிவலிங்கம், ஆசிரியை தங்க ரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை அருள்செல்வி நன்றி கூறினார்.
The post அவ்வையார் அரசு மகளிர் பள்ளியில் முப்பெரும் விழா appeared first on Dinakaran.