×

அழிஞ்சிவாக்கம் முதல் நிலை ஊராட்சியில் ரூ.34.43 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு கட்டிடங்கள்: துரை சந்திரசேகர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

 

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் முதல் நிலை ஊராட்சி உள்ளது. இங்கு, 2020-21 ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டிடம் அண்ணா மறுமலர்ச்சி உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் மற்றும் பள்ளி கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த ஏற்பாட்டை அழிஞ்சிவாக்கம் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி ரமேஷ் ஏற்பாடுகள் செய்து வரவேற்பு அளித்தார்.

சோழவரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜாத்தி செல்வசேகரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற கட்டிடம் மற்றும் அங்கன்வாடி கட்டிடத்தை பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், சோழவரம் ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், உதவி பொறியாளர் ஜெய்சங்கர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜானகிராமன், வார்டு உறுப்பினர்கள் சந்தோஷ் குமார், ரமணி சீனிவாசன், உமா மகேஸ்வரி செல்லயா, உஷா அசோக் குமார், சுபாஷினி சதீஷ் பாபு, தயாளன், முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அழிஞ்சிவாக்கம் முதல் நிலை ஊராட்சியில் ரூ.34.43 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு கட்டிடங்கள்: துரை சந்திரசேகர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Achinjivakam ,Durai Chandrasekhar ,MLA ,Ponneri ,Thiruvallur District ,Ponneri Constituency Cholavaram Union Ajinchivakam ,Dinakaran ,
× RELATED ஊருக்கே நல்ல தண்ணீர் கொடுக்கும்...