×

அலட்சியத்தால் விளைந்த விபரீதம்: 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட்டால்தான் விடிவு

கொரோனா முதல் அலையைக் காட்டிலும், தற்போதைய 2வது அலை தீயாய் பரவி வருகிறது. இந்தியாவில் தினசரி பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டி உள்ளது. தினசரி இறப்பு எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் மீண்டும் பழையபடி உயரத் தொடங்கி உள்ளது. கடந்த பிப்ரவரியில் பாதிப்பு குறைந்த நிலையில், கடந்த 15 நாட்களில் ஜெட் வேகத்தில் தொற்று அதிகரித்துள்ளது. இதற்கான காரணம் மருத்துவ ஆய்வாளர்களுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. கொரோனா 2வது அலை பாதிப்பு திடீரென உயர்ந்ததற்கு இதுவரை எந்த ஆதாரப்பூர்வ காரணங்களும் கூறப்படவில்லை. ஆனாலும், பாதிப்பு அதிகரிக்க, உருமாறிய வைரஸ், மந்தமான தடுப்பூசி பணி, தேர்தல் பிரசார கூட்டங்கள், மக்களின் அலட்சியப் போக்கு போன்றவை முக்கிய காரணிகளாக உள்ளதாக வைரஸ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.அரியானாவின் அசோகா பல்கலைக் கழகத்தின் திரிவேதி ஸ்கூல் ஆப் பயோசயின்சின் இயக்குநர் ஷாஹித் ஜமீல் கூறுகையில், ‘‘கொரோனா உருமாற்றம் மற்றும் தடுப்பூசி பணிகள் ஆகியவற்றை பொறுத்தே, அடுத்த 2 மாதங்கள் இந்தியா மற்றும் உலகின் கொரோனா பரவலின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். முதல் அலை முடிந்ததும், மக்கள் வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிட்டது மீண்டும் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாகும்,’’ என்றார். மத்திய அரசும், அரசியல் கட்சிகளும், மத அமைப்புகளும், பொதுமக்களும் தங்களுக்கான பாதுகாப்புகளை குறைத்துக் கொண்டதாலும் வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ‘பள்ளி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்படாமலேயே பள்ளிகள் திறக்கப்பட்டன. பொது இடங்கள் அனைத்து வழக்கம் போல் திறக்கப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டன. பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் வருவதால், எந்த தலைவர்களும் அதை விரும்பவில்லை. தொற்று நோய் சமயத்தில் தேர்தல் நடத்துவதில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்,’ என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.இங்கிலாந்து, பிரேசில் மற்றும் இந்திய உருமாறிய வைரஸ்களும் 2வது அலைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ‘‘அரசு தடுப்பூசி போடுவதை தொடங்குவதில் மிகத் தாமதமாக்கி விட்டது. கடந்த ஜனவரியிலும் மிக மந்தமான நிலையில் தடுப்பூசி பணிகள் தொடர்ந்தன. இதனால், தற்போது வெறும் 0.7 சதவீதம் பேருக்கு மட்டுமே 2 டோஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, தடுப்பூசி போடும் பணியை அரசு விரைவுபடுத்த வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட தகுதியானவர்கள். அவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த வேண்டும். அதற்கு தேவையான சமமான தடுப்பூசி வழங்கலை உறுதிப்படுத்த வேண்டும்,’ என்கின்றனர் ஆய்வாளர்கள்.* வெளிநாட்டு தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கலாம்தற்போது, மாதத்திற்கு 10 லட்சம் டோஸ் கோவிஷீல்டு டோஸ் மற்றும் 3 லட்சம் கோவாக்சின் டோஸ் செலுத்தும் திறனை இந்தியா கொண்டுள்ளது. எனவே, ஜான்சன் அண்ட் ஜான்சன், ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அனுமதி தர வேண்டும். இந்த தடுப்பூசிகள் வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ளன. இதன் மூலம் தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்கி தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த முடியும் எனவும் வைரஸ் ஆய்வாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.சிகிச்சை பெறுவோரில் 5 மாநிலத்தவர்கள் 70% * இந்தியாவில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 11 லட்சத்து 8,087 ஆக அதிகரித்துள்ளது. இதில், 70.82 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.* நேற்று தினசரி பாதிப்பு 1.52 லட்சமாக பதிவான நிலையில், அதில் 80.92 சதவீதம் மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், உபி, டெல்லி, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பதிவாகி உள்ளது.நாடு முழுவதும் 10 கோடி மகாராஷ்டிராவில் 1 கோடி* கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 35 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 10 கோடியே 15 லட்சத்து 95,147 ஆக அதிகரித்துள்ளது.* மகாராஷ்டிராவில் மட்டும் 1 கோடியே 38,421 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.* மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் நேற்று கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக் கொண்டார்.* கொரோனாவிற்கான ரெம்டெசிவிர் தடுப்பூசி மருந்தை கள்ளச் சந்தையில் விற்றதாக புனே தனியார் மருத்துவமனையை சேர்ந்த நர்ஸ் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.* தடுப்பூசி திருவிழா துவக்கம் 4 நாளில் 10 கோடி இலக்கு: 4 விஷயத்தை பின்பற்ற மோடி அழைப்புநாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதை விரைவுபடுத்தும் விதமாக பிரதமர் மோடி 4 நாள் தடுப்பூசி திருவிழா நடத்துவதாக அறிவித்தார். அதன்படி, தடுப்பூசி திருவிழா நேற்று தொடங்கியது. இந்த 4 நாளில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுளளது. இதையொட்டி, நாடு முழுவதும் பலர் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர். இது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:  மக்கள் 4 விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும், அடுத்தவர் தடுப்பூசி போட உதவ வேண்டும், ஒவ்வொருவரும் அடுத்தவர் சிகிச்சைக்கு உதவ வேண்டும், ஒவ்வொருவரும் அடுத்தவரை காப்பாற்ற வேண்டும். வயதானவர்கள் மற்றும் படிப்பறிவில்லாத மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஒவ்வொருவரும் உதவ வேண்டும். மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். இதன் மூலம் நம்மையும், மற்றவர்களையும் காக்க முடியும். குடும்பத்திலோ அல்லது அக்கம்பக்கத்திலோ யாருக்கேனும் வைரஸ் தொற்று வந்தால் மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதியை மக்களாகவே நிர்வகிக்க வேண்டும். ஜனத்தொகை அதிகமுள்ள இந்தியா போன்ற நாட்டில் இதுபோன்ற நடவடிக்கை மிகவும் அவசியம். மைக்ரோ கட்டுப்பாடு பகுதிகள் பற்றி நாம் எந்தளவுக்கு விழிப்புடன் இருப்பது, அவசியமின்றி வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருப்பது, தடுப்பூசி போடுவது, மாஸ்க் அணிவது போன்வற்றை பொறுத்து நமது வெற்றி அமையும். தயவுசெய்து தடுப்பூசியை வீணாக்காதீர்கள். மக்கள் பங்களிப்புடன், விழிப்புணர்வுடன் நமது கடமையை பூர்த்தி செய்ய முடியும் என நம்புகிறேன். நாம் மீண்டும் ஒருமுறை கொரோனாவுக்கு எதிராக வெற்றி பெறுவோம். இவ்வாறு மோடி கூறியுள்ளார்….

The post அலட்சியத்தால் விளைந்த விபரீதம்: 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட்டால்தான் விடிவு appeared first on Dinakaran.

Tags : 18s ,2nd wave ,1st wave of Corona ,India ,Dinakaran ,
× RELATED மீண்டும் முதல்ல இருந்தா? 3...