×

அறுவடைக்கு தயாரான 1000 ஏக்கர் சம்பா பயிர் சேதமடையும் அபாயம்: கடைமடை விவசாயிகள் கவலை

சேதுபாவாசத்திரம்: கடைமடையில் மீண்டும் தொடங்கிய கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 1000 ஏக்கர் சம்பா சாகுபடி சேதமடையும் அபாய நிலையில் உள்ளதால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர்.மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டது. இருந்தாலும் 5 நாட்கள் வீதம் முறை வைத்து தண்ணீர் வழங்கியதால் டெல்டா மாவட்ட கடைமடைக்கு காலதாமதமாக தண்ணீர் வந்து சேர்ந்தது. நேரடி பாசனம் விவசாயிகள் நடவு பணிகளை காலதாமதமாக தொடங்கினாலும்,ஆழ்குழாய் கிணறு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் நாற்று விட்டு ஆடிப்பட்டம் சாகுபடியை செய்திருந்தனர். சாகுபடி தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.கடந்த ஒரு மாதமாக வங்கக்கடலில் உருவான நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக டெல்டாவில் தொடர்ந்து இடைவெளி விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த வாரத்தில் இடைவெளி விட்டு இருந்த மழை மீண்டும் நேற்றுமுன்தினம் இரவு முதல் கடைமடையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த 1000 ஏக்கருக்கு மேல் நெற்கதிர்கள் தரையோடு சாய்ந்து வயல்களில் தண்ணீர் தேங்க தொடங்கியுள்ளது. மழை தொடருமேயானால் கதிர்கள் முளைத்து சேதம் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் கடைமடை விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்….

The post அறுவடைக்கு தயாரான 1000 ஏக்கர் சம்பா பயிர் சேதமடையும் அபாயம்: கடைமடை விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Sethupavasthram ,Kaadamai ,Dinakaran ,
× RELATED இதயத்தைக் காக்கும் சைக்கிளிங்!