×

அரை இறுதிக்கு முன்னேறிய பெண்கள் ஹாக்கி அணி தங்க பதக்கம் வெல்ல மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஒலிம்பிக் போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி தங்க பதக்கம் வெல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக நடந்து வருகிறது. இதில், இந்திய வீரர்கள் அபார சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். ஹாக்கி காலிறுதி போட்டியில் இந்திய பெண்கள் அணி, வலுவான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய பெண்கள் ஹாக்கி அணி தங்கம் வெல்ல வாழ்த்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளதை அறிந்து பூரிப்படைகிறேன். நீங்கள் வரலாறு படைத்து கொண்டிருக்கிறீர்கள். இறுதி போட்டிக்கு முன்னேறி ஒலிம்பிக் தங்க பதக்கத்தை கைப்பற்ற எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post அரை இறுதிக்கு முன்னேறிய பெண்கள் ஹாக்கி அணி தங்க பதக்கம் வெல்ல மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : M. K. Stalin ,Chennai ,Chief Minister ,women's hockey team ,Olympics ,
× RELATED தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர்...