×

அரவக்குறிச்சியில் திமுகவின் சாதனைகளை வீடு வீடாக சொல்லவேண்டும்

 

அரவக்குறிச்சி, மே 24: அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பாக முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் பாக முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ மற்றும் முன்னாள் எம்எல்ஏவும் அரவக்குறிச்சி தொகுதியின் பார்வையாளருமான தினகரன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

வீடு வீடாக சென்று தி.மு.க. அரசு செய்த சாதனைகளை விளக்கி சொல்ல வேண்டும், வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பாக முகவர்களின் கடமைகளையும், பூத் கமிட்டியினர் எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும், வீடு வீடாக சென்று அவர்கள் உள்ளுரில் இருக்கிறார்களா? அல்லது வெளியூர், வெளிநாடுகளில் இருக்கிறார்களா? 80 வயதுக்கு மேற்பட்ட வர்களா? மாற்றுத் திறனாளிகளா? என்பது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும். மேலும் வாக்காளர்கள் இறந்து விட்டால் அவர்கள் பெயரை நீக்க அதற்குரிய படிவங்களை நிரப்பி உரிய அலுவலரிடம் கொடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.மணிகண்டன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

The post அரவக்குறிச்சியில் திமுகவின் சாதனைகளை வீடு வீடாக சொல்லவேண்டும் appeared first on Dinakaran.

Tags : Timika ,Aravakurichi ,ARAWAKURICHI EAST UNION DIMUKA ,Eastern Union Office ,Aravakurichi East Union Dima ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...