×

அரசு விழாவுக்கு எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்க சொன்ன டெல்லிக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘டாக்டர் ஆசிரியராக மாறி பாடம் எடுக்கலாம்… ஆனால் ஆசிரியர் டாக்டராக மாறி சம்பாதிக்கிறார்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாவட்ட  எல்லையில `வெண்மையான ஆறு’ பேரைக் கொண்ட ஊர்ல செயல்படும் கவர்மென்ட் ஸ்கூல் வாத்தியாருங்க, சரிவர வருவதில்லையாம். அதிலும் டெபுடேசன்னு சொல்லி, அடிக்கடி கட் அடிக்கும் பிஇடி வாத்தியாரு, ரெகுலரா விபத்து நடக்கும் ஊருல தனியா பிசியோதெரபி கிளினிக் வச்சிருக்காராம். வாத்தியார்னு சம்பளம் வாங்குற அவரு, பிசியோதெரபி வேலைய தான் முழுநேரமா பாக்குறாராம். இந்த விவகாரத்துல ஏற்கனவே புகார் கொடுத்தும், ஆபிசருங்க யாரும் கண்டுக்கலையாம். ஒருசில ஆபிசருங்க, பிஇடி வாத்தியார் கிட்டயே வைத்தியம் பாக்கவும் போறாங்களாம். யாரும் சரியா ஸ்கூலுக்கு வர்றதில்ல, காணாம போன ஆர்ஓ சிஸ்டத்த கண்டுபிடிக்கல, டாய்லெட் உள்பட எந்த வசதியும் இல்லன்னு, பல புகார்கள் இருந்தும், அந்த ஸ்கூல் எச்எம் கூட கண்டுக்கலையாம். இதனால விரக்தியின் உச்சிக்கு போன வாத்தியாரு ஒருத்தரு, இத கேட்க யாருமே இல்லையானு, பேஸ்புக்ல புலம்பி தள்ளிட்டாராம்… இந்த தகவல் வைரலாகி… பிசியோதெரபிஸ்ட் ‘கம்’ ஆசிரியருக்கு டிரான்ஸ்பர், இன்கம்டாக்ஸ் பிரச்னை வரை நீளும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஒப்பந்த பணியாளர்களை அடிமைகளாகவே சில அதிகாரிகள் நடத்துறாங்க… தூங்கா நகர மாவட்டத்துல இது அதிகமாகவே நடக்குதாம்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை கவனிக்க, நிர்வாகத்தை பார்க்க… 24 மணிநேரமும் மருத்துவமனையிலேயே 2 நிலைய மருத்துவ அதிகாரிகள் இருக்காங்க. இவர்கள் மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருக்க வேண்டும். ஆனால் இருவரும் வளாகத்தில் தங்குவதில்லையாம். இதில் பெண் மருத்துவ அதிகாரி மதியமே தனது வீட்டிற்கு சென்று மாலையில் தன் சொந்த கிளினிக்கில் கல்லா கட்டுகிறாராம். இதனால்,  மருத்துவ அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் யார் போன் செய்தாலும் அவர் போனை எடுப்பது இல்லையாம். மருத்துவமனை வார்டுகளில் பணிசெய்ய ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பெண் அதிகாரி தனது வீடு மற்றும் கிளினிக் வேலைக்கு அழைத்துச்செல்கிறார்.இதனால் மருத்துவமனையில் பல வார்டுகளில் வேலைகள் பாதிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சம்பளத்தை வாங்கிக்கொண்டு அதிகாரி வீட்டு வேலை செய்ய கட்டாயப்படுத்துகின்றனர்… அதற்காக அவர்கள் வாங்கித் தருவது ஒரே ஒரு டீ தானாம். ஒரு நாளைக்கு கிளினிக் மூலம் ஆயிரக்கணக்கில் வசூலானாலும் அந்த பெண் மருத்துவருக்கு பணத்தை கிள்ளி ெகாடுக்க கூட மனசு இல்லையாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கரன்சியோடு வந்தால் கனிம ஆர்டர்… இல்லாவிட்டால் வரவே வேண்டாம்னு தைரியமாக சொன்ன அதிகாரியாரு…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாவட்டத்தில் செம்மண், ஆற்று மணல், சைஸ் கல் என கனிமவள பொருட்கள் கடத்தல் ஜரூராக நடக்குது. மாவட்டத்தில், 141 செங்கல் சூளைகளில் விதிமுறை மீறல் இருப்பது தெரிந்தும், இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் வந்தும், துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. கல் குவாரிகளிலும் இதே நிலைதான். ஒரு கல் குவாரிக்கு 5 லட்சம் ரூபாய் மாமூல் என இலக்கு நிர்ணயித்து, வசூல் வேட்டை ஜோரா நடந்துக்கிட்டு இருக்கு… கோவை மாவட்ட கனிம வளத்துறை அதிகாரியாக ஒருவர், கடந்த தீபாவளி பண்டிகைக்கு முன்னாடி பதவியேத்துக்கிட்டார். இவர், உடனடியாக செங்கல் சூளை அதிபர்கள், கல் குவாரி காண்ட்ராக்டர்கள் என பெரும் முதலாளிகளை வரவழைத்து பேசினார். அவர்களை பற்றிய விவரங்களை போட்டு வாங்கிட்டடார்… அத்துடன், இனிமே யாரும் என்னை வெறுங்கையுடன் வந்து பாக்கக்கூடாது. மாதம்தோறும் சரியாக மாமூல் வரணும், இல்லாட்டி செங்கல், கருங்கல் நகராதுன்னு அதிரடியாக உத்தரவு போட்டுட்டாரு… அதனால், வேறு வழியில்லாமல், கப்பம் கட்டிட்டு வர்றாங்க… அதனால, கேஸ் போடறது, ரெய்டு நடத்துறது என எல்லா நடவடிக்கையையும் ஏறக்குறைய நிறுத்திட்டாங்க இத்துறை அதிகாரிகள். லைசென்ஸ், ரெனீவல் என எல்லாத்துக்கும் பண மழை கொட்டுதாம்…. இப்ேபாதைக்கு கோவையில பணம் கொட்டும் துறையாக கனிம வளத்துறை இருக்கு…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அரசு விழாவுக்கு மாற்று கட்சி எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கும் இலை கட்சியை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கன்னியாகுமரி தொகுதியில் பொங்கல் பரிசு பொருள் வழங்கும் விழாவில் பேசிய டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருப்பவர்… கன்னியாகுமரி தொகுதியில் 5 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டு விட்டது, இனி அம்மா மினி கிளினிக் தொடக்க விழா நிகழ்ச்சிகளில் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம் அனுமதி பெற்றுதான் திறக்க வேண்டும்… சுகாதார பணிகள் துணை இயக்குநர் இது தொடர்பாக எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்ப வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி உள்ளேன் என்று கூறினாராம். அப்புறம், எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வருகிறார்களோ, இல்லையோ அதிகாரிகள் அழைத்தாக வேண்டும் என்று கூறியபோது, திடீரென எதிர்கட்சிகள் மீது என்ன பாசம் என்று எதிர்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பரபரப்பாக பேசிக் கொண்டனர்…’’ என்றார் விக்கியானந்தா….

The post அரசு விழாவுக்கு எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்க சொன்ன டெல்லிக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Delhi ,Uncle ,Peter ,Mangani district ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக டெல்லி வசந்த்விஹாரில் புதியகட்டடம் இடிந்து விபத்து!!