×

அரசு போக்குவரத்துத்துறை நடவடிக்கை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வசதியாக 500 கூடுதல் பஸ்கள் இயக்கம்

சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க செல்வோரின் வசதிக்காக நாளை கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதில் 2 கோடிக்கும் மேலான வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்கிடையில் பொதுவாக வார இறுதிநாளான வெள்ளிக்கிழமைகளில் பஸ்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எனவே பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால், வரும் வெள்ளிக்கிழமை (நாளை) மேலும் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். அதனால் நாளை கூடுதல் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு ஏராளமானோர் பயணம் செய்யலாம் என்று எதிர்பார்க்கிறோம். அதனால் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையைவிட கூடுதலாக 500 பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். திருச்சி, கும்பகோணம், மதுரை போக்குவரத்து கழகத்தின் பஸ்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பஸ்களாக இயக்கப்பட உள்ளன. கிராமப்புற உள்ளாட்சி தேர்தலின்போது பொதுமக்கள் அதிக அளவு முன்பதிவு செய்திருந்தனர். இவ்வாறு அவர்கள் கூறினார்….

The post அரசு போக்குவரத்துத்துறை நடவடிக்கை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வசதியாக 500 கூடுதல் பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Urban Local Government ,
× RELATED சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட...