அரசு அலுவலகங்களில் 2021-22ம் நிதியாண்டில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்த அரசு உத்தரவு

சென்னை: சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம் – கருத்தரங்கம் நடத்துதல் அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெறத் துணைபுரியும் வகையில் மாவட்டந்தோறும் உள்ள அனைத்துத்துறை அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு 2021-22ம் நிதியாண்டில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க தீ நுண்மி (கொரோனா) நோய்த் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி சென்னை மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் 10.03.2022, 11.03.2022 ஆகிய இரண்டு நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 வரை சென்னை மாநிலக் கல்லூரி கலை அரங்கில் நடைபெறவுள்ளது. இப்பயிலரங்கில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர், தமிழறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளனர். இப்பயிலரங்கு-கருத்தரங்கில் ஒவ்வொரு அலுவலகத்திலிருந்தும் அலுவலர் நிலையில் ஒருவர் (அ) கண்காணிப்பாளர் ஒருவர், பணியாளர் நிலையில் உதவியாளர் (அ) இளநிலை உதவியாளர் (அ) தட்டச்சர் ஒருவருமாக மொத்தம் இருவர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பெறுகிறது….

The post அரசு அலுவலகங்களில் 2021-22ம் நிதியாண்டில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்த அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: