×

அரசனூரில் நாளை மின்தடை

 

சிவகங்கை, ஜூன் 5: சிவகங்கை அருகே அரசனூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு நாளை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. அரசனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி அரசனூர், திருமாஞ்சோலை, இலுப்பக்குடி, பெத்தனேந்தல், ஏனாதி, படமாத்தூர், பச்சேரி, வேம்பத்தூர், பில்லூர், களத்தூர் உட்பட இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு நாளை காலை 10மணியிலிருந்து பிற்பகல் 2மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இவ்வாறு துணை மின் நிலைய உதவி பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசனூரில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Arananur ,Sivagangai ,Arasanur ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி...