×

அம்பாசமுத்திரம் தொகுதியில் மனைவி போட்டி!: நெல்லை மாநகர கூடுதல் துணை ஆணையர் வெள்ளத்துரை சென்னைக்கு மாற்றம்..!!

நெல்லை: நெல்லையில் குற்ற ஆவண காப்பக கூடுதல் துணை ஆணையராக பணியாற்றிய வெள்ளத்துரை பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். காவல்துறை அதிகாரி வெள்ளத்துரையின் மனைவி ராணி ரஞ்சிதம் அமமுக சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், மனைவி போட்டியிடும் தொகுதி உள்ள மாவட்டத்தில் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை பணியாற்றியதால் அவர் சென்னை தலைமை காவல் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியான விஷ்ணு செய்தியாளர்களை சந்தித்தார். அச்சமயம் நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் அன்பு அவருடன் இருந்தார். தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருந்த போது, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் காவல்துறை கூடுதல் துணை ஆணையராக பணியாற்றக்கூடிய வெள்ளத்துரை என்பவற்றின் மனைவி அதே தொகுதியில் போட்டியிடுகிறார். கணவர் அதே மாவட்டத்தில் வேலை பார்க்கும் போது, மனைவி போட்டியிடுவதை எப்படி பார்க்கிறீர்கள் என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த காவல்துறை ஆணையர் அன்பு, அம்பாசமுத்திரம் தொகுதியில் ராணி ரஞ்சிதம் போட்டியிடுவது தெரியவந்தவுடன் உடனடியாக மாநகர காவல்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றிய வெள்ளத்துரையை சென்னைக்கு பணியிடமாற்றம் செய்துள்ளோம். தற்போது அவர் அங்கு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே அம்பாசமுத்திரம் தொகுதியில் அவரது மனைவி போட்டியிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை என குறிப்பிட்டார். …

The post அம்பாசமுத்திரம் தொகுதியில் மனைவி போட்டி!: நெல்லை மாநகர கூடுதல் துணை ஆணையர் வெள்ளத்துரை சென்னைக்கு மாற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Ambasamudram ,Governor ,Nellai Muniti ,Chennai ,Vuthaterai ,
× RELATED யோகா ஆரோக்கியமான நாட்டிற்கு வழிவகுக்கும்: ஆளுநர் ரவி