×

அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: கிணற்று நீர் உயரும் என்பதால் நஞ்சைகாளகுறிச்சி விவசாயிகள் நிலங்களை உழவு செய்து தயார் படுத்தும் பணியில் மும்முரம்

க,.பரமத்தி, டிச.20: அமராவதி அணைக்கு நீர் வரத்து உள்ளதால் எந்த நேரத்தில் அணை நிரம்பி அமராவதி ஆற்றில் உபரி நீர் வரும் அதனால் ஆற்றங்கரையோர கிணறுகள் நீர் மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் நஞ்சைகாளகுறிச்சி விவசாயிகள் தங்களது நிலங்களை உழவு செய்து தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த அமராவதி அணை 90 அடி உயரமும், 4047 மில்லியன் கனஅடி மொத்த கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் நேற்று முதியம் 3மணி நிலவரப்படி 85அடியாக நீர்மட்டம் இருந்தது. அணைக்கு நீர்வரத்து 3ஆயிரம் கன அடி நீர் வரத்து வருகிறது. இந்த அணை நீரை நம்பியும் அமராவதி ஆற்றில் வரும் நீரை நம்பி கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 54 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. மேலும் குடிநீருக்காகவும் பொதுமக்கள் அமராவதி அணையை நம்பி உள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி ஒன்றியம் கோடந்தூர் ஊராட்சியில் வடகரை என்ற இடத்தில் கரூர் மாவட்ட எல்லையை அமராவதி ஆறு தொடுகிறது. இங்கிருந்து மூலத்துரை, அணைபுதூர், சின்னதாராபுரம், ஒத்தமாந்துரை, ராஜபுரம், மற்றும் செட்டிபாளையம், சுக்காலியூர், பெரிய ஆண்டாங்கோவில், திருமாநிலையூர், பசுபதிபாளையம், பஞ்சமாதேவி, வழியாக திருமக்கூடலூர் சென்று காவிரியில் கலக்கிறது. ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் வாழை, சூரியகாந்தி, பருத்தி, சோளம், கம்பு போன்ற பணப் பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து 86அடியாக உயர்ந்துள்ளது. இதனை அறிந்த அமராவதி ஆற்றங்கரையோர விவசாயிகள் ஆற்றில் உபரி நீர் வரும் இதனால் அமராவதி ஆற்றங்கரையோர நிலங்களில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள் நீர் மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் தங்களது நிலங்களை உழவு செய்து தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: கிணற்று நீர் உயரும் என்பதால் நஞ்சைகாளகுறிச்சி விவசாயிகள் நிலங்களை உழவு செய்து தயார் படுத்தும் பணியில் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Amaravati Dam ,Nanjaikalakurichi ,Paramathi ,Amaravati ,Dinakaran ,
× RELATED போதிய மழை இல்லாததால் காய்கறி சாகுபடி செய்ய முடியவில்லை