சென்னை: தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: நிவர் மற்றும் புரெவி புயலால் டெல்டா மாவட்டங்களில் அதிக மழை, காற்று இருந்ததால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. அதோடு குடிசை வீடுகளும், மரங்களும், சாலைகளும், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய குழுவினர் தமிழகத்தில் இரண்டு புயலாலும் பாதித்த அனைத்து மாவட்டங்களையும் பார்வையிட்டு சேதங்களையும் ஆய்வு செய்து மத்திய அரசிற்கு அறிக்கை கொடுத்து விரைவில் தமிழகத்திற்கு மத்திய நிதியுதவியை உடனடியாக பெற்றுத்தர வேண்டும்.
