×

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த ஆலோசனை: அமைச்சர்கள் தலைமையில் நடந்தது

சென்னை: மாநில அளவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் ஆகிய திட்டங்களை ஒருங்கிணைப்பு செய்து செயல்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம் வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர், வேளாண்மை-உழவர் நலத்துறை, துறை தலைவர்கள், தலைமை பொறியாளர்கள், வேளாண்மை பொறியியல் துறை மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: முதல்வரின் முத்தான மூன்று திட்டங்களில் ஒன்றான தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டத்தினை, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தையும் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதன் மூலம் எய்த  இயலும். இரு துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களும் பசுமையாக விளங்கும் என்றார்….

The post அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த ஆலோசனை: அமைச்சர்கள் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை...