×

அந்நிய செலாவணி கையிருப்பை டாலரில் மட்டுமின்றி பல்வேறு நாணயங்களில் வைத்திருக்க ரிசர்வ் வங்கி முடிவு

டெல்லி : ரஷ்யா மீதான மேற்கு உலகின் தடை எதிரொலியாக இந்தியாவும் தமது அந்நிய செலாவணியை டாலரில் இருந்து மற்ற நாணயங்களுக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் ரஷ்யா மத்திய வங்கி அமெரிக்கா, ஐரோப்பிய வங்கிகளில் செய்து இருந்த அந்நிய செலாவணி சேமிப்பை அந்த நாடுகள் முடக்கி உள்ளன. அதனால் ரஷ்யா பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இந்த நேரத்தில் அந்நாட்டிற்கு சொந்தமான 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள அந்நிய செலாவணியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற நிலை எதிர்காலத்தில் வந்துவிட கூடாது என்று முன்னெச்சரிக்கையாக இந்திய ரிசர்வ் வங்கி தமது அந்நிய செலாவணி கையிருப்பை டாலரில் மட்டுமின்றி மற்ற பல நாணயங்களிலும் வைத்திருக்க முடிவு செய்துள்ளது. எனினும் இது 6 மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட முடிவு என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முடிவை மேலும் பல நாடுகளும் எடுக்கக் கூடும் என்பதால் ரஷ்யாவை தண்டிக்கும் விதமாக மேற்கு உலகம் விதித்த கடுமையான தடைகள் பூமராங்காக மாறிவிட்டதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்….

The post அந்நிய செலாவணி கையிருப்பை டாலரில் மட்டுமின்றி பல்வேறு நாணயங்களில் வைத்திருக்க ரிசர்வ் வங்கி முடிவு appeared first on Dinakaran.

Tags : Reserve Bank ,Delhi ,India ,Dinakaran ,
× RELATED ரூ.2000 நோட்டுகளில், 97.87% நோட்டுகள் வங்கி...