×

அதிமுக பொன்விழா மாநாடு விழிப்புணர்வு ஆட்டோ பேரணி

ஊட்டி,ஆக.8: மதுரையில் நடக்கும் அதிமுக., பொன்விழா மாநாடு குறித்த விழிப்புணர்வு ஆட்டோ பேரணி மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வரும் 20ம் தேதி மதுரையில் அதிமுக., பொன்விழா எழுச்சி மாநாடு நடக்கவுள்ளது. இதற்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அதிமுக.,வினர் செல்ல திட்டமிட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் இருந்தும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக.,வினர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த மாநாடு குறித்த விழிப்புணர்வு ஆட்டோ பேரணி மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை வகித்து ஆட்டோ பேரணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊட்டி நகர செயலாளர் சண்முகம், மாவட்ட பிரதிநிதி தேவராஜ், பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம், தேனாடு லட்சுமணன், முக்தார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அதிமுக பொன்விழா மாநாடு விழிப்புணர்வு ஆட்டோ பேரணி appeared first on Dinakaran.

Tags : AIADMK Golden Jubilee Conference Awareness Auto Rally ,Madurai ,Dinakaran ,
× RELATED மதுரை கோரிப்பாளையம் பகுதியில் சோதனை...