×

அதிமுக ஆட்சியில் நிலத்தடி நீர் சேமிப்பில் அலட்சியம் காட்டியதால் சென்னை சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் அதிகளவு சுரண்டல்

சென்னை: அதிமுக ஆட்சியில் நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்க நடவடிக்கை எடுக்காதததால், தமிழகத்தில் 435 பிர்காக்களில்  நிலத்தடி நீர் அதிகம் சுரண்டப்பட்ட பகுதியாகவும், 63 பிர்க்காக்கள் அபாயகரமான பகுதியாக மாறியிருப்பதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் 300 முதல் 500 அடிக்கு கீழ் வரை சென்று விட்டது. எனவே, நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய நிலத்தடி நீர் ஆணையம் சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அதிமுக ஆட்சி கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் அபாயகரமான பகுதியாக மாறியிருப்பது நீர்வளத்துறை சார்பில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில், தமிழகம் முழுவதும் 1166 பிர்காக்களில் 435 பிர்காக்களில் நிலத்தடி நீர் அதிகமாக சுரண்டப்பட்ட பகுதியாகவும், 63 பிர்காக்கள் அபாயகரமான பகுதியாகவும், 225 பிர்காக்கள் பாதி அபாயகரமான பகுதியாகவும், 409 பிர்காக்கள் பாதுகாப்பானதாகவும், 34 பகுதிகளில் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத அளவுக்கு உப்புதன்மை நீர் உள்ள பகுதிகளாக மாறி உள்ளது என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள் வருமாறு: செங்கல்பட்டு, எழும்பூர், கோட்டை, மாம்பலம், மயிலாப்பூர், புரசைவாக்கம், அம்பத்தூர், கொரட்டூர், மதுரவாயல், போரூர், திருவொற்றியூர், மணலி, வாலாஜாபாத், ஆவடி, திருமுல்லைவாயல், பூந்தமல்லி, ஆர்கே.பேட்டை உட்பட 463 பிர்காக்களில் (வருவாய் உள்வட்டம்) அதிகளவில் நிலத்தடி நீர் சுரண்டப்பட்டுள்ளது. இது தவிர சிங்கப்பெருமாள்கோயில், காட்டாங்குளத்தூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், செய்யூர், கூடுவாஞ்சேரி, மாதவரம், உத்திரமேரூர், கொளப்பாக்கம், ராஜாக்கமங்கலம், மணிமங்கலம், பூண்டி, மெப்பேடு, திரூர், ஊத்துக்கோட்டை, நேமம், திருமழிசை, புழல், பள்ளிப்பட்டு, உட்பட 63 அபாயகரமானதாகவும், 226 பாதி அபாயகரமான பகுதியாகவும் மாறியுள்ளது. மீஞ்சூர், உட்பட 34 பிர்கா பகுதிகளில் உப்புத்தன்மை நிறைந்த பகுதியாக இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதில், அதிகமாக நிலத்தடி நீர் சுரண்டப்பட்ட 435 பிர்கா பகுதிகளிலும், அபாயகரமான 288 பிர்காக்களிலும் வணிக ரீதியாகவும், 6 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மேல் கட்டப்படும் கட்டிடங்களிலும் நிலத்தடி நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து, பாதி அபாயகரமான பகுதி மற்றும் பாதுகாப்பான பகுதிகளில் நிலத்தடி நீர் எடுக்க தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்று தமிழக  நீர்வளத்துறை செயலாளர்  சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்….

The post அதிமுக ஆட்சியில் நிலத்தடி நீர் சேமிப்பில் அலட்சியம் காட்டியதால் சென்னை சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் அதிகளவு சுரண்டல் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Chennai ,435 Birkhas ,Tamil Nadu ,
× RELATED சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில்...