×

அதிமுக அமைப்பு தேர்தல் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

சென்னை: அதிமுக அமைப்புத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை ஓபிஎஸ், எடப்பாடி கூட்டாக வெளியிட்டுள்ளனர். அதிமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள நகர, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் பகுதி நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான உட்கட்சி தேர்தல் கடந்த மாதம் 27ம் தேதி அன்று முதல் கட்டமாகவும், ஏப்ரல் 11ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டனர்.அதன்படி, வேலூர் மாநகர், வேலூர் புறநகர், சேலம் புறநகர், சேலம் மாநகர், திருப்பத்தூர், திருவண்ணாமலை தெற்கு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் மேற்கு, நீலகிரி, வட சென்னை வடக்கு(கிழக்கு)(மேற்கு), வடசென்னை தெற்கு(மேற்கு), தென் சென்னை வடக்கு(மேற்கு), தென் சென்னை தெற்கு (கிழக்கு, மேற்கு), சென்னை புறநகர், திருவள்ளூர் மத்தியம், கடலூர் மேற்கு, கடலூர் தெற்கு, தென்காசி தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், புதிதாக பொறுப்பேற்கும் நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். கட்சியின் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என ஓபிஎஸ், எடப்பாடி கேட்டுக்கொண்டுள்ளனர்….

The post அதிமுக அமைப்பு தேர்தல் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,OPS ,Edappadi ,Dinakaran ,
× RELATED சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில்...