×

அதிமுகவினரிடம் விசாரணை

சேலம், ஜூலை 30: பெண்களிடம் ஆபாசமாக பேசிய விவகாரம் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளை போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்தநிலையில், ஸ்டேஷனுக்கு கும்பலாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் செட்டிச்சாவடி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2 நாட்களுக்கு முன் அப்பகுதி பெண் தொழிலாளர்கள் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை பார்த்துள்ளனர். அப்போது மதிய உணவு இடைவேளையின் போது, அவ்வழியே அரசின் தோட்டக்கலைத்துறை திட்ட விளக்க வாகனம் வந்துள்ளது. அந்த வாகனத்தில் ஔிபரப்பப்பட்ட வீடியோவை பெண்கள் பார்த்துள்ளனர். அந்த நேரத்தில் அவ்வழியே வந்த செட்டிச்சாவடி ஊராட்சி மன்ற 4வது வார்டு உறுப்பினரான அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி முனியப்பன் (எ) தினேஷ்குமார், நிர்வாகிகள் சுரேஷ், வெங்கடாசலம் வந்துள்ளனர். அவர்கள், பெண் தொழிலாளர்களை ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளனர். அப்போது அந்த 3 பேரும் குடிபோபடுகிறது.

இதையடுத்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, தங்களை ஆபாசமாக பேசிய முனியப்பன், சுரேஷ், வெங்கடாசலம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தனர். இப்புகாரின் பேரில் அந்த 3 பேரையும் விசாரணைக்கு வரும்படி கன்னங்குறிச்சி போலீசார் அழைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை, அதிமுக சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வீ.ராஜீ தலைமையில் புகாருக்குள்ளான முனியப்பன், சுரேஷ், வெங்கடாசலம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கன்னங்குறிச்சி ஸ்டேஷனுக்கு சென்றனர். அங்கு தங்களை எதற்காக விசாரணைக்கு அழைத்தீர்கள் எனக்கேட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் அந்த 3 பேரிடம் மட்டும் விசாரிக்க வேண்டியுள்ளது. மற்றவர்கள் கலைந்து செல்லலாம் என போலீசார் தெரிவித்தனர். ஆனால், அதிமுகவினர் கலைந்து செல்லாமல் வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர், அந்த 3 பேரும் விசாரணைக்கு செல்லாமல் அங்கிருந்து புறப்பட்டனர். இதையடுத்து மற்றொரு நாளில் அவர்கள் விசாரணைக்கு வர வேண்டும் என அதிமுகவினரிடம் போலீசார் தெரிவித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post அதிமுகவினரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Salem ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை..!!