×

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு

 

திருப்பூர், ஜூன் 14: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவரணி அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை- மங்கலம் கிளை சார்பில் காயிதே மில்லத் பிறந்த தினத்தை முன்னிட்டு மங்கலம் சமுதாயகூடத்தில் 10, 12-ம் வகுப்பு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மங்கலம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் சாதிக் அலி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் மூர்த்தி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

தமுமுக., எஸ்.டி.பி.ஐ.,கட்சியின் நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் மங்கலம் இப்ராஹிம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவர் சையது முஸ்தபா, முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பின் தேசிய துணைத்தலைவர் புளியங்குடி அல்அமீன் ஆகியோர் கலந்து கொண்டு விழா சிறப்புரையாற்றினர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞரணி மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மங்கலம் அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 18 மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது, மேலும் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு மங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தாஹாநசீர் ஏற்பாட்டில் தங்க நாணயம் வழங்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு உறுப்பினர் அபுதாஹீர் மாணவிகளுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கினார்.

The post அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Indian Union Muslim League Party ,Muslim Student Council-Mangalam ,
× RELATED திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி பெறலாம்