×

அதிக ஒளி பாய்ச்சி மீன் பிடித்தால் படகு பறிமுதல் மீன்வளத்துறை எச்சரிக்கை

தொண்டி, செப். 21: அதிக ஒளித்திறன் கொண்ட விளக்குகளை பயன்படுத்தி மீன் பிடித்தால் படகு பறிமுதல் செய்யப்படும் என மீன்வளத்துறை அதிகாரி அறிக்கை வெளியிட்டுள்ளனர். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: ஆற்றங்கரை முதல் எஸ்பி பட்டினம் வரையிலான கடலோர பகுதியில் சில பகுதியில் அதிக ஒளித்திறன் உடைய விளக்குகளை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். அதனால் மற்ற மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால் அடிக்கடி பிரச்னை ஏற்ப்படுகிறது. அதனால் அதிக ஒளி பாய்ச்சி மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி இம்முறையில் மீன் பிடித்தால் படகு மற்றும் விளக்குகள் பறிமுதல் செய்யப்படும். மேலும் கடல் சார் மீன்பிடித்தல் ஒழுங்குமுறை படுத்தும் சட்டம் 1983ன் கீழ் படகு மற்றும் உரிமையாளர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

The post அதிக ஒளி பாய்ச்சி மீன் பிடித்தால் படகு பறிமுதல் மீன்வளத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thondi ,Fisheries ,Assistant Director of ,Fisheries and Fishermen's Welfare ,Gopinath ,Dinakaran ,
× RELATED பள்ளிகளின் அருகே புகையிலை விற்பதை தடுக்க கோரிக்கை