×

அணை பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் திமுக அவசர வழக்கு தாக்கல்!: ஜன.10ல் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் அறிவிப்பு..!!

சென்னை: அணை பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஒன்றிய அரசு அணைகள் பாதுகாப்பு சட்டத்தை மக்களவையில் நிறைவேற்றியது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இச்சட்டம் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இச்சட்டத்தை எதிர்த்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில், மாநில அரசின் அதிகார வரம்பில் உள்ள அணைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், தேசிய அணைகள் பாதுகாப்பு குழு மற்றும்  தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகிய 2 அமைப்புகளை ஏற்படுத்தி நாடு முழுவதும் இருக்கக்கூடிய முக்கிய அணைகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கும் வகையில் மத்திய அரசு இச்சட்டத்தை நிறைவேற்றி உள்ளதாக மனுவில் குற்றம்சாட்டியிருக்கிறார். மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ள இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான வில்சன், ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு முறையீடு செய்தார். அந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அணை பாதுகாப்பு சட்டத்துக்கு எதிரான வழக்கை ஜனவரி 10ம் தேதிக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர். …

The post அணை பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் திமுக அவசர வழக்கு தாக்கல்!: ஜன.10ல் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : DMK ,Chennai ,Chennai High Court ,ICourt ,Dinakaran ,
× RELATED திமுக வழக்கறிஞர் அணி சார்பில் சென்னை ...