×

அடிப்படை வசதிகள் வேண்டி அவனியாபுரத்தில் பொதுமக்கள் சாலைமறியல்

அவனியாபுரம், மே 31: மதுரை அவனியாபுரம் 100வது வார்டு ஜே ஜே நகர் பகுதியில் சாலை, சாக்கடை குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து செய்து தரக் கோரி அப்பகுதி மக்கள் நேற்று 100க்கும் மேற்பட்டோர் மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post அடிப்படை வசதிகள் வேண்டி அவனியாபுரத்தில் பொதுமக்கள் சாலைமறியல் appeared first on Dinakaran.

Tags : Avaniyapuram ,Madurai Avaniyapuram 100th Ward JJ Nagar area ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பாஜவின்...