நாகப்பட்டினம்,ஜூலை12: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் அனுசுயா தலைமை வகித்தார். ஒன்றிய அரசு கடந்த 2002ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியை விட 2003ம் ஆண்டு பட்ஜெட்டில் அங்கன்வாடிக்கு நிதி குறைவாக ஒதுக்கீடு செய்துள்ளதை கண்டிப்பது. அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்வியை மேம்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 ஆண்டு பணி முடித்த அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி போன்ற திட்டப்பணியாளர்களுக்கு தனியாக ஊதியகுழுவை அமைக்க வேண்டும். பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் மகப்பேறு விடுப்பு 1 ஆண்டு காலத்தை அங்கன்வாடி பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
The post அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.